உத்தாரந் தாரும் ஐயே – தோடி
Ajith N Sriram Gangadharan 01 Utharam tharumayya Todi Bharathiyar என்று யு ட்யூபில் பதிந்து அஜித் ஸ்ரீராம் கங்காதரன் என்ற பாடகர் இப்பாடலை (பல்லவி, சரணங்கள் 1. 3 மட்டும்) வயலின், மிருதங்கமுடன், கடம், முகர்சிங்கும் இணைந்து பாடுவதைக் கேட்கலாம்.
இவர் கோபாலகிருஷ்ண பாரதியின் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
பல்லவி
உத்தாரந்தாரும் ஐயே எனக்கு
ஒருவருமில்லை (நான்) பரகதியடைய [உத்தார]
சரணம்
வித்தைகள் கற்றதுமில்லை யானொரு
பத்தியிற் சென்று பரகதியடைய [உத்தார]
குற்றங்க ளெத்தனை கொடியேன் செய்தேன்
அத்தனை யும்பொறுத் தாதரவாக [உத்தார]
பெண்டு பிள்ளையென்று பேயனைப் போலவே
கண்டு களித்துக் காலங் கழித்தவனுக்கு [உத்தார]
தில்லைச்சி தம்பரத்தைத் தரிசித்துவந் துங்கள்
எல்லையைக் காத்துக் கொண்டிருக்கிறேனையே [உத்தார]