4 கடவுள் வழுத்து - இறைவா ஏனோ மறைவாய் இருப்பாய் - பந்துவராளி
பண்: பந்துவராளி தாளம் - ஈரொற்று
பல்லவி.
இறைவா ஏனோ மறைவாய் இருப்பாய் - எந்நாளும்
துணைப் பல்லவி:
.
பறைவாயிற் பற்றில்லிகள் பரமாநீ இ(ல்)லையென்றே
அறைகாலும் அமைந்துற்றாய் அஞ்செவியே உனக்கின்றோ (இறைவா)
உருவடி:
அறைவாய்ப் பூங்குழவி அன்னையின் பால்அருந்தினும்
அவளைக் காணாமைபோல் ஆனதேஎன் நிலைமை
நிறைவாய் எல்லாமாய் நீயெங்கும் இருக்கும்மெய்
நினைவுறுத்து கின்றாயோ நினையறியா தென்புலமை (இறைவா)
- மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்