சேத்துல பொரளுவயா

பட்டணத்திலிருந்து திருவிழாவுக்கு எங்க ஊருக்கு வந்திருக்கற நெட்டக்காலுத் தம்பி, உம் பேரு என்னடா?
😊😊😊
ஓ...டியர் பாட்டி. மை நேம் ஈஸ் சேத்தன்.
😊😊😊
வெள்ளக்காரனுக்குப் பொறந்தவனாட்டம் பேசாதடா. தமிழ்ல உங்க பேரச் சொல்லுங்க தொரை.
😊😊😊😊
பாட்டி என்ன மன்னிச்சுக்குங்க நாங் கொஞ்சம் குறும்புக்காரன்.

😊😊😊😊
அதான் உம் மூஞ்சியப் பாத்தாலே தெரியுதே. பேரச் சொல்லுடா.
😊😊😊😊😊
எம் பேரு சேத்தன், சேத்தன், சேத்தன்.
😊😊😊😊
அடேயப்பா சேத்தா, வீட்டுக்குப் பின்னாடி தான் நாத்து நடற வயலை உழுது வச்சிருக்காங்க. போயு அந்தச் சேத்துல உருண்டு பொரண்டு எழுந்து வாடா சேத்தா. பேரப் பாரு பேரு.
😊😊😊
எம் பேரப் பழிக்காதீங்க. சேத்தன்னா வாழ்க்கைன்னு அர்த்தம்.
😊😊😊
'வாழ்க்கை'ன்னு தமிழ்ப் பேர வச்சா குடியா முழுகிப் போகும்?
😊😊😊😊
காலம் மாறிப் போச்சுங்க பாட்டி. சமூகப் படங்கள் வந்த நாள்ல இருந்தே தமிழின் சீரிழிவு தொடங்கிருச்சு.
😊😊😊😊
ஆமாம்டா சேத்துக்கண்ணு. நீ சொல்லறதும் சரி தான்.

எழுதியவர் : மலர் (8-Aug-18, 1:26 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 109
மேலே