பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை---------சிந்தனைக்கு

கவியரசு கண்ணதாசன் வெளி நாடு போனப்ப நடந்த சம்பவம்னு ஒரு விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால பத்திரிகையில் படித்து தெரிஞ்சுகிட்டேன்.

கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட தரம்தான் சிறப்பானதாச்சே…இவர் போன காரோட ஓட்டுநர் மிக அதிக வேகத்துல போயிருக்கார்.

“இவ்வளவு வேகம் தேவையில்லையேப்பா…” அப்படின்னு கவியரசு சொல்லியிருக்கார்.

“விழாவுக்கு நேரமாயிடுச்சு…அதனாலதான் இந்த வேகம்”னு ஓட்டுநர்கிட்ட இருந்து பதில் வந்துருக்கு.

உடனே கவியரசு கண்ணதாசன்,”தம்பி…பத்து நிமிஷம் விழாவுக்கு தாமதமா போனாலும் பரவாயில்லை…பத்து வருஷம் சீக்கிரமாவே மேல போயிடக்கூடாது”ன்னு சொல்லியிருக்கார்.

இது சிரிப்பை ஏற்படுத்தினாலும் ரொம்பவே சிந்திக்க வேண்டிய விஷயங்க இது.

வாகன ஓட்டிகள்கிட்ட சாலைவிதிகளை மதிக்கச் சொல்லுங்களேன்…ஏதோ தேசத்துரோகம் செய்ய சொன்னது மாதிரி உங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க. அதுக்கு அவங்க சப்பைக்கட்டு கட்டுற காரணம் என்னன்னு தெரியுமா?

நான் ஒழுங்கா போனாலும் எதிரில் வர்ற ஆள் சரியா வரணுமே அப்படின்னு சொல்லுவாங்க…

ரெண்டு பேரும் விதிகளை மதிச்சு வந்தா ரெண்டு பேரும் ஒழுங்கா ஊர் போய்ச் சேரலாம். ஒருத்தர் கவனமா வந்தா குறைந்தது ஆஸ்பத்திரியில சிகிச்சை எடுத்த உடனேயாவது வீடு போக கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.

இதையெல்லாம் காதுல வாங்காம நாயகன் படத்து கமல் மாதிரி அவனை சாலைவிதிகளை மதிக்கச் சொல்லு…நான் மதிக்கிறேன்னு கூவிகிட்டு இருந்தா வாகனம் உங்களை மிதிச்சுட்டு போயிடும்…அப்புறம் நீங்க ஒரேடியா போயிட வேண்டியதுதான்னு கத்தலாம் போல இருக்கும்.

சாலைவிதிகளை மீறுவதில் முதலிடம் பிடிக்கும் தவறு கட்டுப்பாடற்ற வேகம்தான்.


சரண்

எழுதியவர் : (8-Aug-18, 4:49 pm)
பார்வை : 220

மேலே