எங்க மண்ணுப் பையனப் பாத்தீங்களா

ஏண்டி பொண்ணுகளா எங்க மண்ணுப் பையனப் பாத்தீங்களா?
😊😊😊😊
யாரு வேலுச்சாமி அண்ணன் பையன் முருகனையா தேடறீங்க பெரியம்மா?
😊😊😊😊
ஆமாம். வீட்டிலயும் ஊரிலயுந்தான்
அவம் பேரு முருகன். பள்ளிக்கூடத்தில் அவம் பேரு சிரி மண்ணு. அந்தப் பேரு எனக்குப் பிடிக்காததால நான் மட்டும் அவன மண்ணுப் பையன்னு கூப்படறேன்.அவன் எப்பவும் யாருகூடயும் சேராம மண்ணிலயே பொரண்டுட்டு திரிறவன். நம்ம ஊரு பெரிய கோயில் பூசாரி தான் அவனுக்கு சாதகப்படி சிரிமண்ணுனு பேரு வச்சாரு.
😊😊😊😊😊
சிரி மண்ணா? அதென்ன மண்ணு. 'திருமண்'-ன்னு தான் சொல்லுவாங்க.
😊😊😊😊
அதென்னவோ. நான் என்னத்தக் கண்டேன். பூசாரி நல்லது கெட்டது தெரிஞ்சவரு. அதோட மந்திரம் தந்திரமும் தெரிஞ்சவரு. அவுரு பேச்ச மீறமுடியுமா? அவுரு வாக்குப்படி வேலுச்சாமி எம் பேரனுக்கு 'சிரி மண்'ணுன பேரு வச்சுட்டான். நம்ம ஊரு 'மண்ணாங்கட்டி'-ங்கற பேரு மாதிரி சிரி மண்ணும் இருக்குமோ என்னவோ?
■■■■■■■■■■■■■■◆■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
திரைத் தமிழைத் தவிர்ப்போம்.
தமிழ் உணர்வை வளர்ப்போம்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Shriman = gentleman.

எழுதியவர் : மலர் (9-Aug-18, 4:52 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 157
மேலே