கண்ணீருடன் கலைஞருக்கு பிரியாவிடை ------எங்கே என் தனயன் தனித்து காத்து கிடக்கிறது கோபாலபுரத்து வீடு
அண்ணாவின் அருகே துயில் கொள்ள சென்றார் கருணாநிதி..
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அண்ணா நினைவிடம் அருகே மீளாத்துயில் கொண்டார் கருணாநிதி
ராணுவ வாகனத்தில் ஏறவில்லை.. ஊர்வலத்தில் தொண்டர்களுடன் நடந்து செல்லும் ஸ்டாலின்
அப்பாவிற்காக உடைந்து அழும் ''மகன்'' ஸ்டாலின்.. வரலாறு பேச போகும்
போய்ட்டு வாங்கப்பா.. கருணாநிதி தலையை வருடி முகத்துக்கு முத்தம் கொடுத்த கனிமொழி
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சுவர் ஏறி குதித்த தொண்டர்களால் தள்ளுமுள்ளில் தயாநிதி மாறன் சிக்கினார். இதையடுத்து போலீஸார் அவர் மீட்டனர்.கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
கடைசி நொடியில் கண்ணீரில் கதறும் கருணாநிதி குடும்பத்தினர்...மனதை உருக்கும் காட்சி-
எத்தனை லட்சம் பேரோ?.. ராஜாஜி ஹால் முதல் மெரினா வரை.. கூகுள் காட்டும் மலைக்க வைக்கும் புகைப்படம்
தாம் வாழ்நாளில் பெரிதும் நேசித்த அண்ணாவிடம் கருணாநிதி சென்றடைந்தார். தன் உயிர்பிரியும் நேரத்திலும் கூட அண்ணா அளித்த அந்த பொருளை தம்மிடமே கெட்டியாக வைத்திருந்தார் கருணாநிதி.
தி.மு.க. தேர்தல் நெருங்கி விட்டது. கையில் பணம் இல்லாமல் தவித்தார் அறிஞர் அண்ணா. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சத்தை வசூலித்துத் தந்தார் கருணாநிதி. இதனை பாராட்டி, அண்ணா, கருணாநிதிக்கு ஒரு கணையாழி (மோதிரத்தை) அணிவித்தார். இந்த மோதிரத்தை கருணாநிதி பெரிதும் மதித்தார். தன் வாழ்நாளில் அந்த மோதிரத்தை மட்டும் அவர் கழட்டியதே இல்லையாம்.
---------------------------------------------------------------------
எங்கே என் தனயன்.. தனித்து காத்து கிடக்கிறது கோபாலபுரத்து வீடு!
சென்னை: கோபாலபுரம் 4-வது தெரு. அந்த குறிப்பிட்ட வீடு.
கருணாநிதி அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான் இது!! இரவு பகல் ஓயாமல் உழைத்து, திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்று, அரசியலில் சம்பாதித்து வாங்கிய ஒரே வீடு இது மட்டும்தான்!! இதை தவிர வேறு வீடு கருணாநிதிக்கு இருந்ததில்லை!!
நேற்று வரை எத்தனையோ சரித்திர நிகழ்வுகளை பறை சாற்றிய இடம்!! எத்தனையோ அரசியல் சம்பவங்களுக்கு அடித்தளமிட்ட இடம்!! 50 ஆண்டு கால அரசியல், கலை, சினிமா, இலக்கியம், உள்ளிட்ட துறைகளின் ஜாம்பவான்களை வரவேற்று தாங்கி பிடித்த இடம்!!
இந்த கோபாலபுரம் வீடு - இன்று தாயை இழந்த குழந்தையாய் தனித்து விடப்பட்டுள்ளது. பந்தல், தோரணங்கள், அலங்காரங்கள், விளக்குகள் என அலங்கரித்து பார்த்த தன் தந்தையை காணாமல் கண்கள் அலைபாய்ந்து தேடி கொண்டிருக்கிறது. எங்கு சுற்றினாலும், எங்கு பயணித்தாலும் கடைசியில் தன் மடிமேல் வந்தே விழும் தன் சகோதரனை காணாமல் வெறித்து பார்த்துக் காத்திருக்கிறது.
கருணாநிதியின் ஒவ்வொரு அசைவையும் குடும்ப உறுப்பினர்களை விட தான்தானே நன்கு அறிவேன் என்று தன் தோழனை காணாமல் களையிழந்து வருகிறது. தாயாய், தந்தையாய், தோழனாய்... உறவு கொடுத்த உயிர் எப்போது வரும் என கோபாலபுரம் வீட்டின் செங்கற்களும், தூண்களும் தவித்து கொண்டிருக்கின்றன.
வசதி குறைவான வீடாக இருந்தாலும், எளிமையான வீட்டிலேயே கடைசி வரை வாழ்ந்த தன் தனயன் எங்கே என்று வீட்டு கதவுகளும், ஜன்னல்களும் கேட்கின்றன. நோயின்பாதை நீண்டு, அதற்கான போராட்டங்களும் நீண்டு கடைசியில் நீ வருவாய் என வெறிச்சோடி கிடக்கிறது கோபாலபுர வீதிகள்...!
------------------------
கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும்: சிவக்குமார் இரங்கல்
பெரியார் , ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்
அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் . அரசியலில் சாதித்ததற்கு இணையாக - கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர் .
1950களில் தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர். குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா - போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது.
பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் படங்களில் அவர் வசனம் பேசி நடித்தேன். என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார்.
சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் - கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர். தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-------------------------------
அரசியல் பணிகளில் ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதும் எஸ்.வி.சேகரின் அழைப்பை ஏற்று அவருடைய நாடகங்களை ரசித்து பார்த்துள்ளாராம்.
குறிப்பாக 3500வது நாடகம் மற்றும் 5500வது நாடகத்தை கலைஞர் பார்த்து, நடிப்பில் எம்.ஆர்.ராதாவுக்கு இணையானவர் என புகழ்ந்தது என்னால் மறக்க முடியாது எனக் கூறுகிறார் எஸ்.வி.சேகர்.