இந்து மதம் சொல்லும் அறம்

இந்து மதம்
உலகில் முதன்முதலில் மனிதன் உருவெடுத்து வாழ்ந்தான்.பிறகு தனக்கென்று தங்குமிடம் அமைத்தான்.அதற்கும் பிறகு பகுதியை உருவாக்கி மக்களாய் வாழ்ந்து பல் தொழிலை செய்தனர்.பிற்பாடு பல் பகுதிகளாய் வாழ்ந்து வழிகாட்ட தலைவன் வந்தான்.பின்னர் "சைவம்,வைணவம்" என இரு சமயங்கள் உருவாகின.இவ்விரண்டையும் இழுத்தது இந்து மதம்.
கிறத்துவர் உருவாக்கிய மதம் கிறத்து மதம்.கௌதம புத்தர் உருவாக்கிய மதம் புத்த மதம் என்று உருவாக்கியவர்களின் பெயரை வைத்து மற்ற மதங்கள் உருவாயின ஆனால் இந்து மதத்தை உருவாக்கியவர் பெயரும் அது எந்த காலமும் நாம் அறியா.அது மிகவும் பழமை வாய்ந்தது அதனால் தான் பகுத்தறிவாளர்கள் இம்மதத்தை விமர்சனம் செய்கிறார்கள் பின்பு கடைசி காலத்தில் இதை உணர்கிறார்கள் சிலர்.
இந்து மதம் பெண்களுக்கு மிக முக்கியத்துவம் வகிக்கிறது.அதை இம்மதத்தின் சம்பரதாயங்களில் காணலாம்.அவர்கள் பூப்பெய்தால்,கற்பம் அடைந்தால் விழா கொண்டாடுவது.பிறந்த வீட்டுப் பெண் எது கேட்டாலும் செய்ய வேண்டும்,பெண்கள் கண்ணீர் வாளுக்கு சமம்,பெண் பாவம் சும்மா விடாது என்பதன் மூலம் பெண்களுக்கு துன்பம் செய்யக்கூடாது என்று சொல்கிறது.பெண் தெய்வங்களை வழிபடுவது கோக்கும் மனைவியை வைத்து வழிபடுவது என்று பெண்கள் மிக முக்கியமானவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறது.
இம்மதம் இயற்கையையும் மதிக்கிறது.நம்பிக்கையில்லை எனில் "விருட்ச சாஸ்திரம்" படியுங்கள்.இன்ன மரம் நட்டால் இன்ன பயன் கிடைக்கும் என்று மரம் நடவைப்பதையும் இயற்கையின் மதிப்பையும் கூறுகிறது எகா வில்வ மரம் நட்டால் சிவனுக்கு பூசை செய்வதுக்கு சமம்,துளசி நட்டால் பெருமாளுக்கு பூசை செய்வதுக்கு சமம்,வேப்ப மரம் நட்டால் தீய சக்திகள் அண்டாது போன்றவை .விலங்குகளை இறைக்கு வாகனமாகி அதன் முக்கியத்தையும் காட்டுகிறது இந்து மதம்.சித்த மருத்துவம் மூலம் நோய்களை அடியோடு அழித்தது.
இன்றைய விஞ்ஞானத்துக்கு விதையிட்டும் வழி காட்டியும் விளங்குகிறது இந்து மதம்.இன்றைய கிரகணம்,கார்காலம்,கூதிர்காலம்,வேனிற்காலம் போன்றவற்றை அன்றே பஞ்சாங்கத்தில் கூறியும் வரும் காலத்திற்கும் கூறியது.நீர் ஆவியாகி மேகமாய் வந்து மழை பொழிகிறது என்பதை "ஆழி மலைக் கண்ணா" என்ற பாவில் தன் பக்தியுடன் மெய்ஞானத்தை உவமையாய் காட்டுகிறாள் கோதை நாச்சியார் 'ஆண்டாள்'.
முதற்சங்கு அமுதூட்டும், மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் – கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!. என்பதன் மூலம் வாழ்க்கையின் தத்துவத்தை கூறுகிறார் பட்டினத்தார்.அரசர்கள் ஆண்ட அரண்மனை அழிந்தது ஆனால் கோவில்கள் மற்றும் அதை எப்படி செய்தார்கள் என்று சொல்ல முடியா சிற்பங்கள அழியாமல் பல்லாண்டு தாண்டி நிற்கிறது இதன் மூலம் இந்து மதம் கலைகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றதை காணலாம்.
இந்து மத மக்களுக்கு "புன்னியம்","பாவம்" அதாவது நன்மை செய்தால் புன்னியம் தின்மை செய்தால் பாவம் என்று கூறி மக்களை அல்வழிக்கு செல்ல விடாமல் நல்வழிக்கு செலுத்தியது.அடுத்தடுத்த ஜென்மம்களில் பணம் வராது நாம் செய்த புன்னிய பாவமே வரும் என்று எம்மதமும் சொல்லிராத தத்துவத்தை சொல்லிற்று.
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு காடு மட்டே!
"பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!"
இதில் நம்மின் விதி புன்னிய பாவம் தான் என்று சொல்லப்படுகிறது.
இறைவன் இருக்கிறான் நம்மை ஆளுவது நவகிரகங்கள் தான் என்று சொல்லி ஆலயவழிபாட்டையும் செய்ய வைக்கிறது. நம் வாழ்வில் பல தருணங்களில் இந்து மதம் வருகிறது.
இதன்மூலம் இறைவன் இருக்கிறார் என்றும் இந்து மதம் நம்மை வாழ்வின் நல் வழியிலேயே செலுத்தும் என்று தெரியவருகிறது.
-நரேசு தமிழன்.

எழுதியவர் : நரேசு தமிழன் (9-Aug-18, 12:55 am)
சேர்த்தது : Naresh Tamilan
பார்வை : 1181

மேலே