வினோத கள்வனே

என்னை
அலைக்கழிப்பதும்
நீயே..!!
பின்பு ஏனோ
என்னை
தேடித்தேடி
அலைந்து
களைப்பதும்
நீயே..!!

என்னை
அழ வைப்பவனும்
நீயே..!!
பின்பு
உன் விழிகளால்
கண்ணீர்
துடைப்பவனும்
நீயே..!!

காயங்கள் பல
தருபவனும் நீயே..!!
அது தீர்க்கும்
காதல் மருந்தை
தருபவனும் நீயே..!!

என்மீது கோபங்கள்
கொள்பவனும் நீயே..!!
நான் கோபம் கொள்ளும் முன்
இதழ் முத்தம் இடுபவனும்
நீயே..!!

உன்னை
விலகி சென்றிட
என்னை
பணிப்பவனும்
நீயே..!!
எனினும்
அரைக்கணமும்
என்னை பிரியாதிருக்க
யாசிப்பவனும்
நீயே..!!

எனை தொலைத்திட
துணிபவனும்
நீயே..!!
ஏனோ நான்
தொலைந்திடும் முன்,
எனை
கண்டெடுப்பவனும்
நீயே..!!

இப்படி இருமனம் கொண்டு,
தவித்திடும் உன்னை,
விலகிடுவேனோ..??
என்
வினோத கள்வனே..!!

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (8-Aug-18, 9:19 pm)
Tanglish : vinotha kalvane
பார்வை : 659

மேலே