முத்துவேல் கருணாநிதி
தமிழ்த் தாய் கொஞ்சி விளையாடிய
நாவின்று உடலினுள் உறைந்தது
உதய சூரியன் ஒளியை இழந்து
உயிறற்று பூமியில் ஒளிந்து மறைந்தது;
பாசமென்ற மலருக்கு வசனம் புனைந்த
கதிரவன் கண்ணெதிரே கரைந்தது
குறளுக்கு ஓவியம் வரைந்த
விரல்கள் விரைத்தது;
பல கோடி உடன்பிறப்புகள் கதறி அழ
புகழாரம் விண்ணைப் பிளக்க
உடலது கடலருகில் அண்ணன் நிலையருகில்
அடங்கி ஒடுங்கியது நினைவற்று மூச்சற்று;
தவப்புதல்வனை இன்றிழந்து
தமிழ்த்தாய் கதறுகிறாள்
உள்ளத்தில் வீற்றிருப்பார்
உயிரெமது உள்ளவரை.
சம்பத் குமார்
கல்கத்தா