மெரினா கடற்கரை - சி எம் ஜேசு
பறந்தும் விரிந்தும் இருக்கும்
கிழக்கு கடற்கரையாய் நீண்டும் இருக்கும்
ஊர்களுக்கு ஏற்றார் போல
உலாவி அளவளாவிய உன்னத கடற்கரை
சாதி மதம் இனம் நிறம் மொழி பாராமல்
அலையான மக்கள் விளையாடும் கடற்கரை
வரலாற்றுக்கு சான்றாகி வாழ்நாளின் சொந்தமாகி
ஐம்புலன்களுக்கும் இன்பம் ஊட்டும் கடற்கரை
சோதனைகள் கொண்டும் சாதனைகள் கொண்டும்
சென்னையின் சொர்க்கமாகி சுறுசுறுப்பாய் இருக்கும் கடற்கரை
நாட்டின் நான்கு தலைவர்களின் நல்லுறக்கத்திற்கு
நினைவிடமாகி நீங்கா ஓங்கிய புகழ் உடைத்த கடற்கரை
கரைக்கான செய்யும் கலங்கரை விளக்காய்
ஓயாமல் கண்விழிக்கும் தூணாய் நிற்கும் கடற்கரை
தொடரும் ...