என்னவனை கண்டநாள்

எனக்கு தெரியவில்லை உன்னை முதலில் பார்த்தபாெழுது...

நான் இறுதிவரை உன்னை
மட்டும் பார்ப்பேன் என்றும்

நான் பார்க்கும் கடைசி முகம்
நீயாக இருப்பாய் என்றும்

ஒருவேளை உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்
என்னுள் உன்மீதான
இத்தனை அன்பு
இத்தனை ஆசை
இத்தனை எதிர்பார்ப்பு
இத்தனை ஏக்கம்
நான் உணராமல் பாேயிருப்பேன்
என்னவனே...
என்னை நான் அறிந்தேனடா உன்னில்..
நான் உன்னை கண்ட இந்நாளில்..

எழுதியவர் : பிரியா (13-Aug-18, 11:09 am)
பார்வை : 444

மேலே