இது என்ன மாயம்

நடையில் என்னை மயக்கும்
அன்னப் பட்சியே
வெண் தாமரை மலர் சூடி
உலவும் அழகின் கட்சியே
உன் செவ்விதழ் அலகால்
என் நெஞ்சத் தடாகத்தைக்
குடைந்து குடைந்து அங்கு
உன் பால் வியாபித்து நிற்கும்
அன்பையும் ஆசையையும்
வேறாகப் பிரித்து எடுத்து
என்னைக் கொத்திக் கூறாக்குகிறாயே ..
என் மனதைக் கிளறி வேறாக்குகிறாயே
நீ ஏன் செய்தாய் மாயம் ?
இது எந்த வகையில் நியாயம் ?

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (13-Aug-18, 11:31 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ithu yenna maayam
பார்வை : 148

மேலே