காதல்

இருவேறு மாஞ்செடிகள் ஒட்டுப்போட
இரண்டும் இணைந்து ஒன்றாகி புது
மாஞ்செடி உருவாகும் உருவாகி மரமாகி
அது தரும் பழத்தில் இரண்டும் கலந்து,
ஒன்றாய் இனிக்க மணக்க அஃதொக்க
பெண்ணே யாரென்று தெரியா நானும்
நீயும் பார்வையால் ஒன்றானோம் இன்று,
காதலர் நாம், ஒட்டால் வளர்ந்து அதில்
வருகிறதே நம் காதல் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Aug-18, 9:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 146

மேலே