புன்னகை உதிர்ந்தால்
பூ உதிர்ந்தால்
சருகு
உன் புன்னகை உதிர்ந்தால்
காதலுக்குச் சிறகு !
மலை உடைந்தால்
சிலை
சிலை உடைந்து நின்றால்
வரலாறு !
ஆப்பிள் வீழ்ந்தால்
புவி ஈர்ப்பு
ஆதாம் வீழ்ந்தால்
ஆப்பிள் ஈர்ப்பு !
செங்கதிர் விரிந்தால்
காலை
செவ்விதழ் சிரித்தால்
கவிதை !
கோபுரம் உயர்ந்து நின்றால்
அழகு
கோபுரச் சிலையவள் குனிந்து நடந்தால்
அழகு !