என்னவளின் முதல் சந்திப்பு
உனக்கும் எனக்குமான
நம் முதல் சந்திப்பு பிறந்த வேளையில்
ஒரு உலகம் காணாமல் போனது #நம்மோடு !!
நட்பிளகி,
கசிந்துருகி
பின்னரான முதல் சந்திப்பில்
முகம் பார்க்காமல்
சேர்ந்து நடக்க ஆரம்பித்து
#உளறல் பேச்சோடும்
#வெட்கம் சிறிதோடும்
#கொஞ்சம் படபடப்பில்
வானம் நட்சத்திரம் ஆராய்ந்து
சாலை தூரம் அளந்து
அனிச்சையாய் தலைகுனிந்து
கைகோர்க்கும் இச்சை அடக்கி
#கடிகார நேரம் கரைத்து
கரையும் நேரத்தை கடிந்து
உள்ளூர நான் தவித்துக் கொண்டிருக்கையில்
#விரல்கள் உரசும் ஸ்பரிசம் உணர்ந்து
உன்னை நோக்கி என் முகம் திருப்பி
கள்ள சிரிப்போடு
என்னையும் கொஞ்சம் பார் என்றபோது
என்னை முழுதாய் இழந்து நான் உன்னவன் ஆனேன் என்னவளே......