கவிதை ---------------------தமிழே இசையே

அமுதே
தமிழே
அழகிய மொழியே
எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா


தமிழே நாளும் நீ பாடு
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்

பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் tamil
அறிவு வளம் பெருமை தரும்
கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு


படித்த கவிதை ---------------------மெக்ஸிகோ டாக்குமெண்ட்

எழுதியவர் : (13-Aug-18, 7:12 pm)
பார்வை : 63

மேலே