உயிரெழுத்தும் நீ - உயிரும் நீ

உயிரெழுத்தும் நீ - உயிரும் நீ
-------------------------

அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!!!


ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!!


இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இன்பதுன்பத்தை ஏற்று......
இல்லறத்தில் நல்லறம் தருபவளே....!!!


ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!!


உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!!!


ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!!


என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்
எதிர்காலமாகிவிட்டாய் -நீ
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!!


ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!!


ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம்
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!!!


ஒருவனுக்கு ஒருத்தி நீ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!!!


ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!!!


ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ
ஔவை தமிழின் இசை அழகியே -நீ
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி வாழ்வோம் வா ...!!!

@@@
கவிப்புயல் இனியவன்
இலங்கை - யாழ்ப்பாணம்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Aug-18, 9:12 pm)
பார்வை : 207

மேலே