புதைந்த சிலை 15
தாக்கிய நபர்கள் தப்பிச் சென்றனர். புதரில் இருந்த அந்த ஜீப்பை வெகுவாக ஆராய்ந்தார். பின்பு காவல்துறையினரிடம் பரிந்துரை செய்து அவர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். அந்த ஜீப் அதுவாகத்தான் இருக்கவேண்டும் உடனே பாண்டியையும் பாண்டியின் மகள் கயலை அங்கு வரவழைத்தனர். நீ இந்த ஜீப்பையா பார்த்தாய்என்று கேட்டார் அதிகாரி பாண்டியும் அவரது மகள் கயலும்
இதுதான் இதுதான் இதேதான் என பதறினர்.
சாட்சிகள் நிரூபிக்கப்பட்டன. பின்பு அந்த ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த ஜீப் யாருடையது இந்த நிலம் யாருடையது என ஆராய ஆரம்பித்தனர். அதுமட்டுமில்லாது அங்கு பாழடைந்த வீடு முன்பு பல காவலர்கள் குவிந்தனர். அங்கு ஏதாவது தடையங்கள் கிடைக்குமா என்று ஆராய்ந்தார் அதிகாரி மோகினி.
அங்கு பல இடங்களில் தோண்டி மூடிய அடையாளங்கள் இருந்தது. அதை கவனித்தார் இருப்பினும் நிலமாக இருக்கும் ஏதாவது மரகன்று நட்டு வைத்திருப்பார்கள் என்று நினைத்து விட்டு பின் அங்கு காவலர்களை நிறுத்திவிட்டு அந்த ஊர் தலைவரை சந்திக்க சென்றார். அந்த நிலம் அவருடைய தாம்...
போய் பார்க்க அவர் மிகவும் செல்வாக்குடன் இருப்பவர் போலும் அவர் பெயர் துரை......
அவர் படித்தவர் பல விவரங்கள் தெரிந்தவர். கணினிகளை உபயோகிக்கவும் தெரிந்தவர் என அங்கு போய் பார்த்த பின்பு தான் தெரிந்தது அவர் வீடு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
வேலையாட்கள் என பலர் அங்கு இருந்தனர் ,அதுமட்டுமில்லாது அவர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும் இருந்தனர். பார்க்கவே இரண்டு மூன்று பேர்களை அடிப்பவர்கள் போல் உடல் அமைப்பு இருந்தது.
துரையை சந்திக்க அதிகாரி மோகினி காத்துக்கொண்டிருந்தார். வெகுநேரமாக, அப்பொழுது சிலவற்றை கண்டார். அவர் காத்து இருந்த இடத்தில் விலையுயர்ந்த மிகவும் அழகான ஓவியங்கள் சுவரில் மாட்டப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் வெளிநாட்டு ஓவியங்கள் பார்க்கவே மிகவும் வித்தியாசமான ஓவியங்கள்....
அதைப் பார்க்க பார்க்க அவ்வளவு ஒரு அழகு, ரம்யம் சுற்றிலும் அவ்வளவு ஒரு கலைநயம் அழகான அமைப்பு. துரை வந்தார் அவரிடம் அறிமுகம் செய்துகொண்டு பேசத் தொடங்கினார்.
முதலில் அவர் பேசியது சிலையை பற்றியோ அந்த நிலத்தை பற்றியோ அல்லது அந்த பாழடைந்த வீட்டைப் பற்றியோ அந்த ஜீப்பை பற்றியோ அல்ல.....
அவர் கண்ணை பறிக்க ரசித்த அந்த ஓவியங்களைப் பற்றி
இந்த சின்ன ஊரில் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு வீடா????
அதுவும் கண்ணைப் பறிக்கும் அழகிய ஓவியங்கள்????
மிகவும் அழகான கலைநயம் மிக்க ஓவியங்கள்?????
என்று முடித்தார் மோகினி.
துரையும் அதற்கு பதிலளிக்க ஆரம்பித்தார் பதற்றப்படாமல் முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் இது என் நண்பர்கள் கொடுத்த ஓவியம் அவர்கள் எனக்கு பரிசாக கொடுத்தது. அவர்கள் வெளி நாட்டைச் சார்ந்தவர்கள் என்று முடித்தார்.......
ஓ!! பரவாயில்லையே வெளிநாட்டிற்கு எல்லாம் போய் வந்து இருக்கீங்க போல, என்றார் அதிகாரி மோகினி...
உடனே துரை என்ன விஷயமாக வந்து இருக்கீங்க?????
அது ஒண்ணும் இல்ல உங்க தொப்புல அதுவும் தென்னந்தோப்புல புதருக்குள்ளே ஒரு ஜீப் மறைந்து இருந்தது. அதை கண்டறிந்தோம் அதுமட்டுமில்லாம பாழடைந்த வீட்டின் அருகே சிலர் என்னை தாக்கினர் .அவர்களும் உங்கள் போலவே இருந்தனர்.
உடனே துரை எங்கள் ஆட்கள் எவரும் இருக்க மாட்டார்கள் .அந்த தோப்பு புதரில் ஜிப்பா என ஆச்சரியத்துடன் கேட்டார் எதுவும் தெரியாதது போல,
எங்க ஊரு காவல் நிலையத்திற்கு வந்து போக முடியுமா சந்தேகத்தின் பேரில் உங்களை விசாரிக்க வேண்டும் என்றார் மோகினி.
என் மேல் சந்தேகமா??? அந்த ஊரிலேயே அவர்தான் கொடைவள்ளல் போல அந்த ஊர் மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார். பல நல்ல பேர்களை வாங்கி வைத்துள்ளார் துரை.
தோப்பில் காவலர்கள் நின்றிருப்பதை பற்றியும் தலைவரை காவல் துறையினர் சந்திக்க வந்ததை அறிந்த ஊர் மக்கள் கூடினர் அங்கு..
ஏதாவது பிரச்சினையா?
எங்கள்ஊர் தலைவர் எதுவும் செய்திருக்க மாட்டார் .அவர் மிகவும் நல்லவர் ,வல்லவர் மற்றும் நிறைய உதவிகள் எங்களுக்கு செய்துள்ளார் .அவரால் தான் இந்த ஊரை மிகவும் பெருமை படுகின்றது என ஊர்மக்கள் புகழ்ந்து தள்ளினர்.....
உடனே அதிகாரி மோகினி பதற்றப்படாதீர்கள் சிறிய விசாரணை தான் விசாரித்துவிட்டு அனுப்பி விடுகிறேன் என அனுமதி பெற்று அவரை அழைத்து சென்றார்.
ஜிப்பையும் பறிமுதல் செய்தார்.
விசாரணை தொடங்குவதற்கு முன்பாக தன் குறிப்பேட்டில் இருந்த சிலரை அழைத்து வருமாறு காவல்நிலையத்தில் இருந்த காவலர் ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்.....
மற்றும் அவருடன் பாண்டியும் அவரது மகள் கயலும் இருந்தனர்.....
துறைதான் குற்றவாளியா? அவன் சிலைகளை திருடி இருப்பாரோ ?என்ன செய்திருப்பார் ?எவ்வளவு சொத்து இருக்கிறது. செல்வந்தராக இருக்கின்றாரே, எதுக்கு இந்த வேலை அது மட்டுமல்லாது அவர் ஏன் தன் ஊரில் மட்டுமல்லாது அடுத்தடுத்த ஊரிலும் சிலைகளை திருடி இருக்க வேண்டும் என்ன நடக்கிறது இங்கே யார் எடுத்திருப்பார்கள் யார் தான் குற்றவாளி ??????

