தாய்மை _கவிதை
ஆயிரம் உறவுகள் அன்புசெய்தாலும் ஆத்தா நீ காட்டும் அன்புக்கு ஈடில்லையேடி.
ஆயிரந்தான் விதவிதமா சாப்பிட்டாலும் உன் மடிமீது படுத்துகொண்டு திண்ற திணைமாவு அளவுக்கு இல்லையேடி ஏதும். உன் மடியில படுத்து உறங்கின உறக்கம்
பஞ்சுமெத்தையிலே புரண்டு புரண்டு படுத்தபோதும் வல்லையடி ஆத்தா.
மத்தவங்களுக்கு கொடுத்த மரியாதை கூட உனக்கு தல்லையடி ஆத்தா, இருந்தும் மத்தவங்க தூற்றினபோதும் வாடா செல்லம் னு கொஞ்சுனவளும் நீதானே என் ஆத்தா.
கோபத்தில மகனே ரெண்டு அடி அடிச்சுபுட்டு சாப்பிடாம பள்ளிகூடத்துக்கு போயிட்டானு நீ குமுறிய குமறல்கள் கொஞ்ச நஞ்சமோ
ஆத்தா.