நீ இல்லா என் வாழ்க்கை
நூல் அற்ற ஆடையாகவும்
நீர் அற்ற ஓடையாகவும்
நிலவு அற்ற வானமாகவும்
மழை அற்ற மேகமாகவும்
கரை காணா அலையாகவும்
மணம் மாண்ட பூவாகவும்
சிறகு இழந்த பறவையாகவும்
பார்வை அற்ற விழியாகவும்
சிரிப்பு அற்ற மழலையாகவும்
வண்ணங்கள் இல்லா வானவில்லாகவும்
வளம் செழிக்கும் வசந்தகாலமும் என்னை வாட்டும் கோடைகாலமாய் மாறுமடி என் அருகில் நீ இல்லா என் வாழ்க்கை