தொலைதூரக் காதல்
தொலை தூரம் நீ இருக்க..
தொடமுடியாமல் நான் தவிக்க..
ஆழ்கடல் தாண்டி நீ இருக்க..
ஆகாயம் அளவு அன்பிருக்க..
கொஞ்சி பேசி இன்பம் போக்க..
கோடைகால விடுமுறை இருக்க..
அதுவரை அன்பே!!!
தொடர்பு கொண்டு பேசி சிரிக்க..
தொலைபேசி தானிருக்க..
நித்தம் நித்திரையிருக்க..
நிதம் நிதம் கனவுகளில் காதலிக்க..
என் நெஞ்சத்தில் நீ துடிக்க..
உன் சுவாசத்தில் நான் கலக்க..
காலம் முழுவதும் கண்னே!!!
காதல் செய்வோம் கண்மணியே!!!