அடல் பிகாரி வாஜ்பாய் கவிதை 1------------------------பனிப்புஷ்பங்கள்

பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்,
இதோ இருந்தன
இப்போது இல்லை,
எப்போதும் நம்முடன்வரும்
இனிமைச் சுகங்கள்
என்றும் இருந்ததில்லை
எங்கும் இல்லை

பனிக்கால கர்ப்பத்தினின்று
கிளம்பி வரும் குழவிச்சூரியன்,
கிழக்கின் மடியில்
தவழத்தொடங்கும் போது
என் தோட்டத்தில்
ஒவ்வொரு இலையிலும்
பொன்னௌளி சுடர்விடுகிறது

முளைத்தோங்கும் சூரியனை
எதிர்கொண்டு கும்பிடுவேனா,
கதிர்வீச்சில் கொலைந்துபோன
பனித்துளியை தேடுவேனா?
சூரியன் ஒரு நிதர்சனம்.
அவனை இல்லை என முடியாது
ஆனால் பனித்துளியும்
ஒரு சத்தியம் தானே

கணநேர சத்தியம்
என்பது வேறு விஷயம்.
அந்த கணங்களை நுகரவே
நான் ஏன் வாழக்கூடாது
கனத்திற்குக் கணம்
ஒவ்வொரு துளியிலும்
பரந்து கிடக்கும்
சௌந்தர்யங்களை
ஏன் பருகக்கூடாது?

சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
எல்லாப்பருவங்களிலும்
காண இயலாது


-அடல் பிகாரி வாஜ்பாய்
- தமிழில் வாமனன்

எழுதியவர் : (16-Aug-18, 7:42 pm)
பார்வை : 121

மேலே