நல்லோரும் அறிஞர்களும் வாழவேண்டும் இறைவா

நேற்று 'கலைஞர்' காலமானார்
இன்று 'பாரத ரத்னா' வாஜ்பாயி காலமானார்
இருவேறு துருவங்கள்
ஆனால் இருவரும்
அறிய ராஜதந்திரிகள்
இருவருக்கும் ஒற்றுமையும் உண்டு
இருவருமே ஒப்பற்ற பேச்சாளர்கள்
இருவரும் கவிஞர்கள்
இருவேறு துருவங்கள் அரசியலில்
இன்று நாடு இழந்து தவிக்கின்றது
போதுமடா சாமி நீ பழி தீர்த்துக்கொண்டது
நல்லோரும் அறிஞரும்
வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும்
நாடு செழுத்திட இறைவா
காலனுக்கு சில ஆண்டுகள்
'ஓய்வு விடுமுறை' தந்திடு
எங்கள் அறிஞர்களும்
ராஜதந்திரிகளும் பல்லாண்டு
வாழ அவர்களால் நாடு
நலம்பெற வேண்டும் அவர்கள்
வகுக்கும் பாதையில் முன்னேறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Aug-18, 3:14 am)
பார்வை : 36

மேலே