வரலாறாக மாறிய சில காதல் கதைகள்
ஒவ்வொருவரின் காதல் கதை மிகவும் சுவாரஸ்மானதாக இருக்கும். அதனை வாழ்ந்து காட்டியிருக்கும் அந்த காதலர்களுக்குத் தான் அதனுடைய வீரியும் புரியும். ஆனால் அவர்களின் காதல் மூலமாக இன்று வரை நம் நினைவில் வாழுகின்ற சில காதலர்களைப் பற்றி தெரியுமா?
இன்றைக்கு இருப்பதைப் போன்ற வசதிகளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை. ஏராளமான சமுதாய அடக்குமுறைகளை தாண்டியே தங்களின் காதலை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். பல்வேறு இன்னல்களை கடந்து காதலில் ஜெயித்து காட்டிய அவர்களின் ஒவ்வொரு கதையுமே நமக்கு இன்ஸ்பிரேஷன்!!!!!
மனிதனின் நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே காதல் என்ற உணர்வும் இருக்கிறது, அன்றைய தினத்திலிருந்து இன்று வரை உயிர்ப்புடன் இருப்பதும் அந்த காதலே...
--------------------------------
ஷாஜஹான் மும்தாஜ்
ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும் சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான்.
அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது காதல்.ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம் கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம வயது. ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது குழந்தை பிறந்தது.
பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.
---------------------------
அம்பிகாபதி அமராவதி
கம்பனின் மகன், அம்பிகாபதி.குலோத்துங்க சோழனின் இளவரசி, அமராவதி.கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம் காதலைக்கற்றுக் கொண்டாள்.
காதலை அறிந்த மன்னன் அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதிக்கிறார்
அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.
----------------------------------
லைலா மஜ்னு
அரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்விகற்கும்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது. காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.
திருமணம் முடிந்தாலும் மஜ்னு நினைப்பிலேயே இருந்தால் லைலா, அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள். அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு அதிகமானது.
இதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.
--------------------
ரோமியோ ஜூலியட்.
இருவர் வீட்டிற்கும் முன்பகை இருந்தது. ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது காதல் மலர்ந்தது.
குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க,
அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
ஆஷிகா