வீண்ன்னு முடியுதே
ஏன்டா கண்ணையா, கல்யாணம் பண்ணீட்டு வெளிநாடு போனவன் குடும்பத்தோட அஞ்சு வருசம் கழிச்சு வந்திருக்கிற. உன்னோட ரட்டைக்
கொழந்தைங்க புகைப்படத்தைக்கூட நீ அனுப்பி வைக்கல.
😊😊😊😊😊
பாட்டிம்மா, இப்பத்தான் என் மனைவி திருமகளையும் குழந்தைகளையும் அழச்சிட்டு வந்திருக்கிறனே ஆசைதீர அவுங்கிட்ட கொஞ்சி வெளையாடுங்க
😊😊😊😊
ஆமாம் கொழந்தைங்க பேருங்களச் சொல்லு.
😊😊😊😊
பையன் பேரு 'பிரவீன்'. பொண்ணுப் பேரு 'பர்வீன்'.
😊😊😊😊
என்னடா கண்ணையா, ரண்டு கொழந்தைங்க பேரும் 'வீண்'ன்னு முடியற மாதிரி வச்சிருக்க? வீணப்போறதுக்கா புள்ளைங்கள பெத்துக்கிறோம்?
😊😊😊😊
பாட்டிம்மா இது தமிழ் 'வீண்' இல்ல. அருமையான அர்த்தம் உள்ள பேருங்க.
😊😊😊
அப்ப சரி. நீ அர்த்தமுள்ள பேருங்களப் பிள்ளைங்களுக்கு வச்சதுக்கே உன்னப் பாராட்டணும்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் (கலப்படத்) தமிழைத் தவிர்ப்போம். தமிழுணர்வை வளர்ப்போம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Praveen = expert, skilled.
Parveen = star. Iranian (Persian) origin.