நோவா விட்ட காகம் சிறு கதை

முன்னொருகாலத்தில்
மக்களின் அடங்காத் தனங்களும்
கொடுமைகளும் சுய கோட்பாடுகளும்
உலகில் மனிதனின் பண்பற்ற நிலையை உருவாக்கியது ,
இதைஉணர்ந்த கடவுள்
மனிதனுக்கு தான் கொடுத்த அளவுக்கு மீறிய சுதந்திரமே
இதற்கு கரணம் என்று அறிந்தார் ,
தன்னிலை, சுய கவுரவம் , பண்பு இவற்றை உணராத மக்கள் இனி உலகில் வாழக் கூடாது
என முடிவெடுத்து உலகில் வாழும் உயிரினங்களையும், மனிதர்களையும்
அழித்துவிடத் தீர்மானித்தார் ,
,அன்றய மனிதர்களில் ஒரேயொரு குடும்பத்தை மட்டும் தெரிந்தெடுத்து ஒரு மிகப் பெரிய அளவிலான பேழை ஒன்றை செய்து அந்தப் பேழைக்குள் அந்தக் குடும்பத்தையும்
தான் படைத்த உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜோடி ஜோடியாய் அந்தப் பேழைக்குள்
அடக்கி அந்தப் பேழை எத்தகைய வெள்ளைப் பெருக்கு வந்தாலும் அழியாமல் அமுங்காமல்
நீரில் மிதக்க விட்டார்,
அதுவே நோவாவின் பேழை , அதன் பின் உலகம் முழுதும் வெள்ளைப் பெருக்கு ஏற்பட செய்தார், அவ்வெள்ளப் பெருக்கால் எல்லாமும் அழிந்தது , ஆனால்
இந்தப் பேழை மட்டும் அழியாமல் மிதந்து கொன்டே இருந்தது , நாள்களும் நகர்ந்து போயிற்று
பேழைக்குள் இருக்கும் நோவாவிற்கு வெள்ளம் வற்றி விட்டதா என்று அறிய
தன்னுடன் கூடஇருந்த ஜோடிக் காகத்தை வெளியே அனுப்பினார்
அது வெள்ளம் வற்றி விட்டால் ஏதாவது மரத்தின் இலையைக் கிள்ளிக் கொண்டு வரும் என்று நினைத்தார்
ஆனால் போன காகம் திரும்பி வரவே இல்லை, இதுதான் நோவா விட்ட காகம் என பழமொழியாகிவிட்டது ,
சிலநாள் கழித்து தன்னுடன் இருந்த புறாவின் ஜோடியை வெளியே அனுப்பினார் , அந்தப் புறாக்கள் போய் வெளியே தெரிந்த மரத்தின் இலையை பிய்த்துக் கொண்டு வந்தது , அப்போதுதான் நோவாவிற்கு வெள்ளம் வற்றி விட்டதால் மரங்கள் தெரிகின்றது என அறிந்தார் ,
அந்த நோவாவின் பரம்பரையே பலுகிப் பெருகி பூமியை நிரப்பியது
,

எழுதியவர் : பாத்திமாமலர் (18-Aug-18, 11:49 am)
பார்வை : 275

மேலே