புதைந்த சிலை 16

துரையை விசாரணைக்கு அழைத்துச் சென்றார் அதிகாரி மோகினி. அழைத்துச் சென்று விசாரணை தொடங்கினார்.
அந்த நிலம் யாருடையது என்று கேட்டார்என்னுடையது தான் என்று பதிலளித்தார் துரை. அந்த ஜீப் யாருடையது என அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என்று வினவினார். அதற்கு எனக்கு தெரியாது என பதிலளித்தார் துரை.

பின் துரையை விசாரணையின் பேரில் 15 நாட்கள் விசாரிக்க வேண்டும் என அதிகாரி மோகினி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வென்றார். அந்த பாழடைந்த வீட்டை சுற்றி காவலர்கள் பாதுகாப்பு இருந்தன. மேலும் சிலைத் திருட்டு போன இடத்திலும் காவலர்களால் கண்காணிக்கப்பட்டனர். அந்தக் காட்டில் சுற்றிலும் போலீசார் இருந்தனர்.

காட்டில் சுற்றித்திரிந்த லிங்கத்தையும் விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணை கடுமையாக இருக்க போலீசார் அங்கும் இங்கும் இருக்க பதுங்கியிருந்த நான்கு பேரில் இருவர்சிலை திருடிய அந்த நபர்கள் வெளியில் என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியே வந்தனர்.
அப்பொழுது அங்கே விளையாடிக்கொண்டிருந்த பாண்டியன் மகள் கயல் அவர்களில் ஒருவரை பார்த்து விட்டாள். திருடர்கள் திருடர்கள் என கத்த தொடங்கி விட்டாள்.
மறைந்து கொண்டனர் தப்பி ஓட முயற்சித்தனர். மேலும்இருவரும் பொதுமக்களால் சூழப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பிடிபட்ட கைதிகளை பற்றி அதிகாரிக்கு தகவல் சென்றது . விரைந்து வந்து விசாரணையை தொடங்கினார். காந்தியின் மகள் கயல் இறங்கும்போது பார்த்த நபர் இவர்தான் என்று ஒருவரைக் கை காட்டினாள். பின்பு கைதிகளை விசாரித்த அதிகாரி விசாரிக்க விசாரிக்க அவர்கள் உண்மையை ஒத்துக்கொள்ளவில்லை. உங்களுடன் எத்தனை பேர் இருக்கின்றனர். மற்றவர்கள் எங்கே? உண்மையை சொன்னால் தப்பிப் பிழைக்கலாம்......
சொல்லுங்கள்....‌‌‌‌
அதிகாரி கேட்க கேட்க யாரும் வாய் திறக்கவில்லை.
இன்று அதிகாரி மோகினி துரை எல்லாம் சொல்லி விட்டார். .வாக்குமூலம் கொடுத்து விட்டார். சிலை எங்கு இருக்கின்றது என்று சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லாமல் நீங்கள் யாரெல்லாம் இருக்கின்றீர்கள் என்றும் சொல்லிவிட்டார்.

துறையா யாரது? அவர் யார்? என்றே எனக்கு தெரியாது. என வாய் திறக்க ஆரம்பித்தனர். துரையா யாரது ?
என தெரியாதது போல் நடித்தனர்.
பின்பு புகைப்படம் இவர் யாரென்று தெரியாதா மிரட்டினர்.
எங்களுக்கு தெரியாது .....
எங்களை விட்டு விடுங்கள் என்றனர்.

பின் அதிகாரி மோகினி என்ன செய்வது என தெரியாமல் குழம்பி நின்றார். பின் அரசு மருத்துவர் ஒருவரிடம் உதவி பெற்று மன நல நிபுணர் அவரை அழைத்து வந்து ஆழ்மன பரிசோதனை செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விசாரணை மேற்கொண்டார்.
மன நிலைமருத்துவர் தனது பரிசோதனையை ஒருவர் மீது செலுத்தினார்......

அவர் பேச ஆரம்பித்தார் கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டன. நாங்கள் 5 பேர் பிழைப்பிற்காக நாங்கள் செய்து வருகின்றோம். ஒரு வயதான பெரியவர் போல இருப்பவர் எங்களுக்கு இங்கு யார் இருக்கின்றார்கள். எங்கு யார் இருக்கின்றனர் எந்த நேரம் ஊர் அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் இருக்கும். என ஆராய்ந்து எங்களுக்கு சொல்லுவார் அதில் யார் சந்தேகப்படுபவர்கள் இருக்கின்றனர் என்றும் சொல்லுவார் அவர் பெயர் லிங்கம்.


இரவு நேரங்களில் காட்டிற்குள் லிங்கம் இருப்பார் பின்பு ஜீப்பில் வந்து சிலையை திருடி கொண்டு எங்களிடம் கொடுத்து விடுவோம் அவர் புதைத்து வைப்பார் ‌.
பின்பு காவல்துறையினர் அனைவரும் விசாரித்து சென்று வழக்கு இந்த அமைக்கும்பொழுது அந்த சிலைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்று விடுவார். அனைத்து வேலைகளையும் அவரே செய்வார். வரும் பணத்தை பங்கிட்டுக் கொடுப்பார் பின்பு இவ்வுரை விட்டு வெகுதூரம் சென்று விடுவோம் நாங்கள் தங்குமிடத்தில் பக்கம் மீண்டும் லிங்கம் பிச்சை எடுப்பவர் போல அனைத்தையும் அறிந்து எங்களிடம் சொல்வார்.


விசாரணையில் திருப்பங்கள் ஏற்பட்டு விட்டன. குற்றவாளிகள் கண்டறிந்து விட்டனர். இருப்பினும் பதுங்கியிருக்கும்
இன்னும் இருவரை தேடிக் கண்டறிய வேண்டும். லிங்கம் கைது செய்யப்பட்டுவிட்டார்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (18-Aug-18, 11:24 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 79

மேலே