அவளா என் காதலி

நீயும் நானும் பாதத்தில்
பிறந்தவர்கள்
வெவ்வேறு சாதிகளில்
கருவிலேயே
சாதி முத்திரை
குத்தப்படுவதால்!

என் பெயரும் நிறமும்
உன் கண்ணில்
நான் தலையில் பிறந்தவனாய்த்
தெரிந்ததும் வலை வீசினாய்.

நானும் பாதத்தில் பிறந்தவன்
என்பதை அறிந்த நீ
உன்னை உயர்த்திக் கொள்ள
தேடினாய் தேடினாய்
எங்கெங்கோ தேடினாய்
தலையில் பிறந்த ஒருவனை
வலைவீசிப் பிடிக்க.

மேல்படிப்புக்குச்
சென்றபோது
சென்னை குழுகுழு
நூலகத்தில்
பிறமொழி பேசும்
தலையில் பிறந்த ஒருவன்
உன் வசம் ஆனான்.

யாருக்கும் சொல்லாமல்
அவனை மணமுடித்தாய்
வரவேற்புக்கு மட்டும்
எனக்கு அழைப்பிதழ்
அனுப்பி வைத்தாய்!
நான் வரவேண்டும்
உன்னை வாழ்த்த
வேண்டும் என்பதற்காக
அல்ல.

நீ சாதி அமைப்பின்படி
தலையில் பிறந்த ஒருவனை
மணந்து உன்னை உயர்த்திக் கொண்டதை உணர்த்தவே
உன் திருமண வரவேற்பு
என்பதை அறியாத மூடனா
நான்.

மணம் காணும் வரை
பொட்டே வைக்காத நீ
அதன் பின்னே
உஷா உதூப் போல
இரண்டு ரூபாய் அளவுப்
பொட்டை
வைத்துக் கொள்வதாக
யமுனா சொன்னாளே.

எனக்கு ஆசை காட்டி
மோசம் செய்தாய்
நான் வருந்தவில்லை.
சினம் கொள்ளவும் இல்லை.

சா'தீ'யை காதல் நீருற்றி
உன்னால் அணைக்க முடியாவிட்டாலும்
தலையோடு ஐக்கியமாகி
உன் கனவை நிறைவேற்றிக் கொண்டாய்!

வாழ்த்துகிறேன்
குண்டு அழகியே
எங்கிருந்தாலும் வாழ்க!

எழுதியவர் : மலர் (19-Aug-18, 11:04 am)
Tanglish : avalaa en kathali
பார்வை : 276

மேலே