ஒரு குட்டி கதை அவளை பற்றி
(படித்து ஜொள்ளு விட்டா நான் பொறுப்பில்லை)
°அன்று மேகம் ஊற்றிய அந்த மழைநீரை
பழுங்கி விரல்கள் கொண்டு
குடுவையின் கழுத்தை பிடித்து பிடித்தாள்.
°உடலெங்கும் ஓடும் இரத்தத்தின் இனிமையெல்லாம்
ஒருசேர வைத்திருக்கும் இதழ்
உடையாதவாறு வைத்தால்
குடுவையின் வாயை
அவள் வாய் மீது.
°குடுவையில் இருந்த குளிர்ந்த நீர்
அவளுள் செல்லும் போது
குடலை உரசி சூடேற்றி
கதகதப்பின் தாகத்தை
தீர்த்துக்கொண்டது.
°தாகம்தீர்த்தவள்
குடுவையின் வாயை பிரித்தால்
தன் வாயிடமிருந்து...
°குடுவையின் வாயில் இருந்த கடைசி துளிநீர்
தான் தவறவிட்டத்தை எண்ணி
தாவி பல கைகள் கொண்டு பற்றியது
அவளின் இதழ் மெத்தையை.
°துளிநீரின் குளிர்தாலாதவள்
தன் நாவின் துணையுடன்
இதழ் நுனியில் உயிருக்கு போராடிய நீரை
காப்பாற்றி உள் செலுத்த...
°கதகதப்பானது நீர் மட்டும் அல்ல
நானும் தான்.