கவிதையெனும் சிசு

திடுமென பிறந்து
வீறிட்டு அழுதிடுமோ
பிள்ளைகள்...?
மனதில் உதித்து
சிந்தையில் பரவவேண்டும்
அந்த தீ கனல்...
பிரசிவிப்பதில்
சிலது வீறிட்டு அழும்
சிலது வீரம் பேசும்
பெரும்பான்மையானது
காதலை
இறுக பற்றிக்கொள்ளும்...
விழிக்காமல் உறங்கியவையும்
பிறக்காமலே இறந்தவையும்
என்ன சொல்ல
நினைத்ததோ....?

எழுதியவர் : சுரேஷ் குமார் (18-Aug-18, 1:13 am)
Tanglish : kavithaiyenum sisu
பார்வை : 128

மேலே