காந்தியத்தின் சாத்தியம்

சத்தியம் சிவம் சுந்தரம்
இதுதான் காந்தியம்
தன்னலம் இல்லா
பேராசை இல்லா
காம க்ரோத மத மாச்சரியம் இல்லா
மானுடம் மலர வேண்டும்
மாற்றானை சுட்டும் விரலை மடக்கி
தன்னை நெறிப்படுத்தும் தனிமனிதன்
புவியிலே உருவானால்
காந்தியம் சாத்தியமே
முயற்சி திருவினையாக்கும் எனும்
வள்ளுவத்தின் வாக்கும் பொய்த்திடுமோ
புது யுகம் மலர்ந்திட நம்மில் இருந்து
ஆரம்பிப்போம் அமைதி போரை இந்த புரட்சி போரை

எழுதியவர் : lathasrinivasan (18-Aug-18, 7:46 am)
சேர்த்தது : preme
பார்வை : 107

மேலே