காதல்
நீலவான பெருந் தடாகத்தில் பூத்த
ஒற்றை பெரும் குமுதமா வெண்ணிலா நீ,
இன்று இங்கு என் மனதாம் தடாகத்தில்
வந்து மலர்ந்தாயா என்னவளாய் நீ,
சொல்வாய் நிலவே வெண்ணிலவே
உன்னை வானில் பார்த்து உன் நினைவிலேயே
இருந்துவிட்டேன் , என்னவள் நினைவு வந்தபோது
நீ வந்து என் மனதில் நிறைந்தாய் என்னவளாய்
எந்தன் காதலி குமுதவல்லியாய்.
அவள் பிரிவால் வாடும் என்னை நினைத்தாயோ,
அவளுக்கு மட்டும் ஏன் இன்னும் என் மீது கோபம்,
இதையும் அறிந்துவந்து சொல்வாயா நிலவே.நீ.