பாதிப்பு

பச்சை வயல்கள் நடுவினிலே
பாதை போட்டான் விவசாயி,
நிச்சயம் உதவும் தனக்கென்றும்
நன்றாய்த் தொழிலை மேம்படுத்த,
அச்சம் வந்ததே இப்போது
அகலப் படுத்தும் பாதையிலே
நிச்சயம் வந்திடும் பாதிப்பு
நம்பி யிருக்கும் பாமரர்க்கே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Aug-18, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paathippu
பார்வை : 68

மேலே