முகம் மூட விட்டான் புகை
இரு உள்ளங்கையின் இடையே
சிந்தனையை பரப்பிவிட்டு,
மன அழுத்தத்தை கையுடே
அனுப்பி கசக்கி உருட்டி,
எண்ணமென்னும் தாளில் கொட்டி சுருட்டி,
பலரை ஏசிய தீப்புணல் வையில் வைத்து,
சாம்பலாகும் மூச்சு காற்றில் பற்ற வைத்து,
முகம் மூட விட்டான் புகை,
பலர் வாழ்வுக்கு அவன் நாவே பகை...