உணவும் உயிரே
உயிர் கொடுக்கும் தாயின் கருணை போல்
வல்லமை படைத்தது நீயும் நானும் உண்ணும் அரிசி
பரிணாம வளர்ச்சியின் அடையாளமாக நாம்
மார் தட்டி கொள்ளும் இனப்பெருக்கம் சக்தியின்
மூதாதையர்கள் ஒவ்வொரு விதையும்
உணவின் அருமை தெரியாது செழித்த காலங்கள்
சென்று முடிந்து யூகங்கள் கடந்த போயினும்
பிற்போக்காக வீணடிப்பதை வாடிக்கைக் கொண்டு
வாழும் அறிவு ஜீவிகளும் வாழும் காலமிது
உயிறுள்ள அணுக்களின் கூட்டை மதியாது
சாக்கடையில் கொட்டும் அவலத்தைச் செய்கின்றோம்
எனவே உணவை மதியாதவர் எவரேனும் பார்த்தால்
உரைப்பது போல் எடுத்துரையிங்கள் அது உங்கள்
வீட்டுக் கண்ணாடியில் பார்த்தால் கூட