சாலை சந்திப்பில்

குண்டுங்குழி ரோடு
வழியெங்கும் பள்ளம் மேடு
ஒருபுரம் பரபரப்பில் பாசாங்கு மனிதக் கூட்டம்
மறுபுரம் ஒலிப்பெருக்கின் ஒவ்வாத ஓலங்கள்
இதற்கிடையில் நின்றுகொண்டிருந்தேன் நானும்
என் இரு சக்கர வாகனத்தில் ...

இடவலம் நகர முடியா நகர்வலம்
சட்டென்று துளிர்த்தது ஒரு துளி மழைத்துளி
என்னவென்று அன்னார்ந்து பார்த்தேன்
மேகக்கூட்டங்கள் மேல்கலையை
மின்னல் இடி காது கிழித்தது...

சட சடவென பருவமழை பெய்யத்தொடங்கியது
திக்கொன்றாய் சிதறியது வாகனங்கள்
திக்குத்தெரியாமல் நான் மட்டும் நின்றிருந்தேன்..

கொஞ்ச தூரத்தில் கொஞ்சல் மொழி கேட்க
சட்டென நானும் திரும்பி பார்த்தேன்...

பச்சை பசேல் மரத்தடியில்..
குண்டு குண்டு கண்ணால ,
கொத்தித்தின்னும் கண்ணாளன்,
பால் முகம் மாறா பாலகனொருவன் ,
வரிசையில்லா பற்களில் எனைப் பார்த்து ஏதோ சொன்னான் ?!

கொண்ட விழி எடுக்க நான் மறந்தேன்..
வந்த வழி தொலைந்தேன்!
கருவிலே கவியானவனோ..
எத்தெருவிலும் தெரியாதவனோ..

சுட்டி உனையே நான் சுற்றம் கொண்டேன் ..
அங்கேயே நானும் சூதும் போனேன்..

கபடமில்லா கள்வனே...
நீ கவர்ந்தாயே எந்தன் ஜீவனே!

கொட்டிய மழைத்துளி நின்றது..
பருவமழை எப்போதும் போல் பொய்த்துப்போனது...

மீண்டும் பரபரப்பு பற்றிக்கொள்ள
நகரத்து கனவான்கள் கட்டவிழ்த்த காளைகளானார்கள் ...

காட்சியும் மாறியது..
சூழ்ச்சியும் புரிந்தது..
மனத்தை அவனிடத்தே விடுத்து..
வெறுங்கூடாய் நானும் நகர்ந்தேன்..

மறுநாளும் வந்தேன்
அந்த சாலை சந்திப்பில் நின்றேன்..
மரத்தடியில் மனங்கொண்டு
மனம் அவனைத் தேடியது..

மழையும் வரவில்லை
அந்த மழலையும் வரவில்லை !

கனவு உலகிற்கு என்னை களவாடிக் சென்றவனே...
கண்ணீர் துளிகளுடன் சாலை சந்திப்பில் ...!

எழுதியவர் : குணா (19-Aug-18, 7:50 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : saalai santhippil
பார்வை : 779

மேலே