எழுதுகோல்

இரு விரல் சேர்ந்து
ஒரு பெரிய விரலை
பயன்படுத்துகிறது!!!!

நீ மழலையின் கையில்
உனக்கேற்ப எழுதுவாய்
அப்போது நீயும் குழந்தை!!!

ஆனால் நீ பெரியவர்களின் கையில்
அவர்கள் நினைத்தவண்ணம் எழுதபடுவாய்
அது உனக்கு தேடித்தரும் பெருமை!!

ஆஹா என்ன விந்தை? நீ ஆட்டிப்படைக்கப்பட்டாலும்
பலரை ஆட்டிப்படைக்கப்படாமல் காக்கிறாய்!!
இது உனக்கே உரிய மேன்மை
அது பலருக்கு பெரிய நன்மை!!!

உன்னால் உயர்ந்தவர் பலர்
உயர்த்தப்படபோவோரும் பலர்
கத்தி முனையைவிட பேனா முனை
கூர்மையானதே!!!
எழுதுகோலே உனக்கு நான்
தலைவணங்குகிறேன் !!!

எழுதியவர் : ஆசைமணி (18-Aug-11, 9:41 pm)
சேர்த்தது : PRANAHITHAN
Tanglish : ezhuthukol
பார்வை : 248

மேலே