தொலைத்தலும் தொலைந்து போதலும்

தெரியாமல் தொலைப்பதை விட
தெரிந்தே தொலைப்பதுதான்
அதிகம் காதலில் . . .

பார்வையில் புதைந்து
இதயத்தை தொலைப்பதும் . . .

கனவுகளில் மிதந்து
நிஜத்தை தொலைப்பதும் . . .

கற்பனைகளில் மூழ்கி
யதார்த்தங்களை தொலைப்பதும் . . .

ஏக்கத்தில் மூழ்கி
தூக்கத்தை தொலைப்பதும் . . .

ஆசையை கூட்டி
நிம்மதியை தொலைப்பதும் . . .

பிரிவினில் தவித்து
சந்தோஷத்தை தொலைப்பதும் . . .

காத்திருக்கும் சுகம் பெற
நேரத்தை தொலைப்பதும் . . .

அவசர கதியில்
நாகரிகத்தை தொலைப்பதும் . . .

பல காரணங்கள் காட்டி
காதலை தொலைப்பதும் . . .

காதல் தோல்வி எனில்
உயிரை தொலைப்பதும் . . .

என . . . . . . .

வாடிக்கையாகி விட்டது
அனைவருக்கும் . . .

தொலைத்தலும்
தொலைந்து போதலும் . . .

எழுதியவர் : ந.சத்யா (21-Aug-18, 11:10 am)
சேர்த்தது : சத்யா
பார்வை : 195

மேலே