தாலி காத்திடு காளிதேவி---பாடல்---
பல்லவி :
என் உயிர் காப்பாயோ?...
ஓம் ஓம் என போற்றி வந்தேன்... (2)
கந்தனின் தாயே... காத்தருள் வாயே
பாராயோ?... கண்திறந்தே...
வாராயோ?... மண்பிறந்தே...
என்உயிர்...
அனுபல்லவி :
ஊன் உயிர் உருகினேன் வா வா என் தாயே...
கருகும் திரியானேன் தா தா பூ மஞ்சள் நீயே...
என்உயிர்...
சரணம் 1 :
அம்பிகை நீயும் கண்களை மூடி
நிற்பதுதான் மாறாதோ?...
உன் மகளின் பிறைநெற்றி குங்குமத்தைக் கேட்பாயோ?...
பிணி நீக்கும் வரம் தந்து கணவனை மீட்பாயோ?...
படரும் கொடி வேரினை இழந்தால் ஒத்தையில் வாழாதே - மண்ணில்...
என்உயிர்...
சரணம் 2 :
சங்கரன் பாதி சங்கரி மீதி
ஒன்றெனவே நின்றாயே...
என்னவனோ?... எனைவிட்டு நீங்குவதைக் காண்பாயோ?...
சிலை என்று தினம் நிற்க தவத்தினைக் கொண்டாயோ?...
வலியின் மொழி காதினில் சொல்லி உன்னிடம் சேர்ந்தேனே - வந்து...
என்உயிர்...