கண்ணனைத் தேடும் கண்கள்---பாடல்---

சின்ன சின்ன வண்ண குயில் மெட்டில் :

பல்லவி :

சின்ன கண்ணன் தேடி வரும்
நாளை எண்ணி பாடுகின்றேன்...
மழையோடு பொன்தேகம்
மயிலாக நின்றாடும் (மழையோடு...)
பூப்போல தேன் சிந்தும் நாணம் நாணம்...

சின்ன கண்ணன்...

சரணம் 1 :

கண்ணனின் கீதம் கேட்டு
கோதையாய் காத்து வந்தேன்...
கண்களை மோகம் தொட்டு
சோலையாய் பூத்து நின்றேன்...

சந்திக்கும் ஆவலில் தாகமோ?... கூடுதே...
சக்கரை ஆற்றினில் உள்ளந்தான் ஓடுதே...

வானவில்லின் ம்... ம்...
வண்ணம் சேர்ந்து ம்... ம்... (வானவில்லின்...)

வாழ்வின் பாதை மாறிடும்
காலம்... காலம்... காலம்... காலம்...

சின்ன கண்ணன்...

சரணம் 2 :

கல்யாண கூறைப் பட்டு
கட்டத்தான் ஆசை கொண்டேன்...
காணாத சொர்க்கம் ஒன்றை
கண்ணணால் மண்ணில் கண்டேன்...

வற்றாத ஓடைகள் நெஞ்சிலே பாயுதே...
வான்நிலா போலவும் இன்னுயிர் காயுதே...

இந்தப் பந்தம் ம்... ம்...
ஒன்று சேர ம்... ம்... (இந்தப்...)

வாழ்க்கை இன்ப காவியம்
பாடும்... பாடும்... பாடும்... பாடும்...

சின்ன கண்ணன்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 6:02 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1316

மேலே