இலவுகள்

இலவுகள்
=================================ருத்ரா

இன்றாவது
அவள் பார்வைத் தென்றல் வீசும்
என்று
அவன் காத்திருந்தான்.
நாட்களை மாதங்களை
அவன் கணக்கிடவில்லை.
அவளும் தான்
அவன் தன் முகத்தைப் பார்த்திடுவான்
என்று
அவள் அங்கு காத்திருந்தாள்.
அது
பூத்து
காய்த்து
கனியாமலே
ஆனால் உலர்ந்து
வெடித்து விடும் போலிருக்கிறதே.
காளிதாசரே
உடனே
உங்கள் அன்னத்தை
இங்கு அனுப்பி வையுங்கள்.
வெறும் பஞ்சாய் அது சிதறுமுன்
காதல் உயிர்க்கும்
பாடல் ஒன்றையும்
அன்னத்தின் காலில் கட்டி
அனுப்புங்கள்.

============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (21-Aug-18, 6:04 pm)
பார்வை : 55

மேலே