இரட்டைமலை சீனிவாசன்---பாடல்---

இரட்டைமலை சீனிவாசன்---பாடல்---

இரட்டைமலை சீனிவாசன் 159வது பிறந்தநாள் சிறப்புப் பாடல்
(07/07/2018)


பல்லவி :

சந்திரரே சூரியரே
சங்கத் தமிழ் நாட்டின் போர் வாளே...
சொந்தமென்றே வந்தவரே
எங்கக் குலப் பாட்டன் நீ தானே...
(சந்திரரே...)

ஒரு விதை உறங்கிட வேர் கொண்டதே
தேசம் புது தேசம்...
உனை மனம் நினைந்திட பூக்கின்றதே
வீரம் புது வீரம்...

உன்னைத்தான் மனம் எண்ணித்தான்
உயிர் வாழ்கிறோம்...
இன்றும் உயிர் வாழ்கிறோம்...

சந்திரரே...


சரணம் 1 :

வட்ட மேசை மாநாட்டில்
காணும் துன்பம் உரக்கச் சொன்னாய்...
சட்ட மேதை நீயாகி
வாதம் செய்து உரிமை வென்றாய்...

கிழக்கில் முளைத்து நீ... மேற்கில் சாய்வதில்லை...
வழக்கு தொடுத்து நீ... வாழ்வில் தோற்றதில்லை...
(கிழக்கில்...)

சரித்திரம் படைத்த உன் வாழ்க்கை
நாங்கள் படிக்கும் வரலாறு...
அதை அழித்திடத் துடிக்கும் வஞ்சத்தால்
இங்கே நடக்கும் தகராறு...

வீட்டையும் கோயிலாய் நீ நினைத்தாய்...
கை பூட்டிய விலங்கினைத் தான் உடைத்தாய்...
(வீட்டையும்...)

உன்னைத்தான் மனம் எண்ணித்தான்
உயிர் வாழ்கிறோம்...
இன்றும் உயிர் வாழ்கிறோம்...

சந்திரரே...


சரணம் 2 :

ஒன்று சேர்க்கும் நீதிக்கு
நேர்மை கொண்டு கடமை செய்தாய்...
கொன்று பார்க்கும் நீதிக்கு
கொள்ளி வைத்து விடியல் தந்தாய்...

மிதிக்கும் உணர்வை நீ... நாளும் ஏற்றதில்லை...
மதிக்கும் குணத்தை நீ... நீக்கி வாழ்ந்ததில்லை...
(மிதிக்கும்...)

வலிகளைத் துடைக்கும் உன் வார்த்தை
காயம் தடவும் மருந்தாகும்...
அதை உணர்ந்திட உயரும் நெஞ்சத்தால்
வாழ்க்கை இனிக்கும் விருந்தாகும்...

கல்வியின் தேவையை நீ உரைத்தாய்...
புது வேள்வியில் தீமையைத் தான் எரித்தாய்...
(கல்வியின்...)

உன்னைத்தான் மனம் எண்ணித்தான்
உயிர் வாழ்கிறோம்...
இன்றும் உயிர் வாழ்கிறோம்...

சந்திரரே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 5:38 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 341

மேலே