பராசக்தியே பாவைகளைக் காத்திடம்மா---பாடல்---

ஆனந்த குயிலின் பாட்டு மெட்டில் :


பல்லவி :

ஓம்சக்தி உலகின் தேவி உனை நெஞ்சினில் போற்றி வந்தேன்... (2)
கோவிலில் ஒளிரும் தீபம் இரு கண்களில் ஏற்றி நின்றேன்...

மலர்களின் வாழ்வையிங்கே கொடும் மிருகம் பருகுதே...
முல்லை மொட்டு வாழ்ந்து கொண்டே தினம் தீயில் கருகுதே...

வளரும் பெண்ணுக்கோ?...
நரகம் என்றுந்தான்
இனி தந்து விடு சொர்க்கந்தான்...

ஓம்சக்தி...


சரணம் 1 :

வீரம் என்ற ஆடையொன்றை மானுக்கும் நெய்வாயோ?...
காமமதில் சாதலொன்றை வேங்கைக்கும் செய்வாயோ?...

கொட்டுகின்ற தேள்விழியை ஆணுக்குள் வைத்தாயோ?...
நீர்மிதக்கும் பூவிழியை பெண்ணுக்குள் தைத்தாயோ?...

வந்த துன்பத்தின் கேள்வியோ? வெந்த உள்ளத்தில் வேள்வியே
பார்வதி நீயும் பார்த்தது போதும் சிம்மத்தில் தோன்றிடம்மா...

தீமை வந்தால் தீர்த்து வைப்பாய் வாசல் வந்தேன் காத்தருள்வாய்...


சரணம் 2 :

அம்பிகையே அம்பிகையே ஆருயிர் தந்தாயே...
இன்னல்களில் கல்லுருவில் காட்சிகள் கண்டாயே...

ஆபத்திலே பாதி உயிர் காக்கவும் செல்வாயோ?...
பாவத்திலே பாவி உயிர் தேடியும் கொல்வாயோ?...

இருள் நீக்கும் தேவியே அருள் வாக்கும் தேவையே...
தாய் தந்த தேகம் நாய் தின்று சாகும் வந்திடு காளியம்மா...

சோகங்களை கீதங்களாய் பாடி வந்தேன் காத்தருள்வாய்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 5:50 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 2514

மேலே