எட்டு வழிச்சாலை---பாடல்---
![](https://eluthu.com/images/loading.gif)
வைகறையில் வைகை கரையில் மெட்டில் :
பல்லவி :
என் விதியில் செய்யும் சதிகள்
வென்றால் இறப்பேன் உன் வழியில்... (2)
பொன் வயலில் செல்லும் தார் ஒழுகும்
சாலை அழிக்கும் பூமரங்கள்...
என் விதியில்...
சரணம் 1 :
உன் வினையால் நிலமோ?... ஒழியும்
என் பசியால் வயிறோ?... கிழியும்
செய்தொழிலில் இருளே நுழையும்
வாழ்வினில்தான் கனலே வழியும்
நெருப்பினில் தந்தை பாய் விரித்தால்
பூவைக்கும் கூந்தல் தாயிழப்பாள்
கொன்றே வளர்ந்தால் நானழிவேன்...
என் விதியில்...
சரணம் 2 :
சோலையில் ஆலைகள் தோன்றுவதில்
நோய்களைத் தந்திடும் சாபம் கண்டேன்...
சாலைகள் ஏருழும் பூமிகளில்
போடுதல் செய்திடும் பாவம் என்பேன்...
உரிமையை இங்கே பறிப்பது ஏன்...
கடமையை நீயோ?... மறப்பது ஏன்...
உளிபோல் நெஞ்சை உடைப்பதுமேன்...
என் விதியில்...