வானம் இல்லாத நிலவு---பாடல்---

பல்லவி :

தாயுனைக் கண் தேடுது
ஊன் உயிர் புண் ஆகுதே...
உன்னோடு நிழலாய் வந்தேன் நீ
இல்லாத உலகில் வெந்தேன்...


சரணம் 1 :

மடி மேல் துயிலும் உன் வாசமில்லை
பூ போல் மிதிந்தேன் பலர் காலில்...
ஒரு பசுவுடன் கன்று வரும் அழகு என்னில்
நெய் வார்க்குது தீ அணையாது...


சரணம் 2 :

தினம் உன் நினைவில் என்னை நான் மறந்தேன்
உனை விட்டு நின்றால் உறவேது...
என் மனதினிலே உன் இறை வடிவம்
பெயர் சொல்லி பெற்றேன் புது வேதம்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 7:16 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1594

மேலே