அனுபவம்

வாழ்வது ஒரு முறைதான்
வாழ்க்கையே அனுபவம் தான் !
கோபங்கள் தாபங்கள் எதற்காக ?
வஞ்சமும் வன்மமும் எதற்காக ?
கூடி வாழ்வோம் நமக்காக
கும்பிட தெய்வங்கள் அதற்காக!
கண்ணீர் காயங்கள் எதற்காக
கண்முன்னே காலமே பதிலாக !
இயற்கையின் நியதியை ஏற்போமே
ஈசனின் ஆசையை காப்போமே!
நீ எனும் நான் எனும் பேதங்கள்
பதில் சொல்லும் அவனின் வேதங்கள்!
கல்லாய் மண்ணாய் பிறந்தாலும்
அதுவும் அவனின் படைப்பாகும்!
காட்டிலும் மேட்டிலும் திரிந்தாலும்
அதுவும் அவனின் நினைப்பாகும்!
கோபுர கலசத்தில் இருந்தாலும்
கோயிலின் வாசலில் கிடந்தாலும்!
கோமகன் அவனின் மதிப்படியே
எல்லாம் நடக்கும் விதிப்படியே !!