இதுவா சுதந்திரம்

பறக்கும் பறவையைக்
கூண்டில் அடைப்பதா சுதந்திரம்?!

வீசும் தென்றலை
விலைக் ொடுத்து வாங்குவதா சுதந்திரம்?!

மனிதனை மனிதன்
அழிப்பதா சுதந்திரம்?!

பணக்காரனுக்கு ஒரு நீதி
பாமரனுக்கு ஒரு நீதி
இதுவா சுதந்திரம்?!

மனிதர் உணர்வை
மதிக்கத் தெரியா மண்ணிலே
மாண்டு விட்டதடா சுதந்திரம்?!
மாண்டு விட்டதடா சுதந்திரம்?!

குருதியை வியர்வையாய் சிந்தி
சமமக்கள் சம ோடு வாழ,
தன் இன்னுயிரைத் துச்சமென எண்ணி
சாதித்து பெற்ற சுதந்திரம்
இன்று இல்லையே எம்தேசத்தில்?!

எங்கும் ஊழல்!
எதிலும் ஊழல்!
ஏழ்மையும், வறுமையும்?!
பசியும், துக்கமும்?!
வேலையில்லா திண்டாட்டமும்?!
வளங்கள் அழிவும்?!
விலை ோன கல்வியும்?!
விடைத் தெரியா மக்களும்?!

இதுவா அண்ணல் காந்தியடிகள்
காணத் துடித்த பாரதம்?!

அகிம்சை வழியைக் கையில் ஏந்தி
அமைதி ோராட்டம் நடத்தி,
வெள்ளையனை நாட்டை விட்டு துரத்தி,
பாரத மண்ணிலே
மூவர்ணக் ொடியை ஏத்தி,
வந்தே மாதரம்
என முழக்கமிட்டு!
மக்களை ஒன்றிணைத்து
வாழ வைத்த பாரதத்திலே?
இன்று ஒற்றுமையை இழந்து நிற்க?!

கண்கள் கலங்குதய்யா?
இதுதான் பாரதத்தின் பெருமையா?!

இதுவா சுதந்திரம்?!

எழுதியவர் : உஷாராணி (26-Aug-18, 12:28 am)
பார்வை : 3024

மேலே