உனை நம்பினேன் அய்யா - கீரவாணி
முத்துத் தாண்டவரின் பாடல்
பல்லவி
உனை நம்பினேன் அய்யா (நான்)
அனுபல்லவி
நாகம் புனை சம்போ நடராஜா புலியூர் வாழ் ஈசா (உனை)
சரணம் 1
இருவர் தம் இசைகொண்ட காதா தித்தி என நின்று நடம்செய்யும் இங்கித பொற்பாதா
திருநாவலூரன் விடு தூதா தில்லை சிவகாமி ஒரு பாகா சிதம்பர நாதா (உனை)
சரணம் 2
மழுவினைத் தரிக்கின்ற கையா கொன்றை மலர்மாலை புனைகின்ற வடிசுடர் மெய்யா
எழு புவி துதிக்கின்ற துய்யா அன்பர் இடமாய் இருந்தின்பம் உடனாளும் அய்யா
சரணம் 3
நெடியமால் அயன்தேடிக் காணாதெங்கும் நிறைந்தவா எலும்பெல்லாம் அணிந்திடும் பூணா
அடியவர் தொழுந் தமிழ்ப்பாணா தில்லையம்பதி நடராஜா அம்பலவாணா (உனை)
Vijayalakshmy_Subramaniam - unai nambinEn ayya - kIravANi - muthutANDavar