பெண் கல்வி அவசியம் கட்டுரை

பெண்கள் கல்வி அவசியம்
பெண்கள் அடுப்படியில் கிடந்த காலம் மலையேறிவிட்டது
பட்டம் பதவி வேண்டாம் ,பகுத்தறிவு மிக்க பெண்களாக
இன்றய அனைத்து பெண்குழந்தைகளும் பற்பல துறைகளிலும் கல்விபயின்று
தொழில்நுட்பங்கள் தெரிந்து
கல்வியென்ற தேரை வடம் பிடித்து வாழ கல்வியே துணையாகும்

பெண்களின் அழகு நிலையற்றது ,
ஆனால் அறிவுதான் என்றும் அழகாய் நம்மை தாங்கி நிற்கும்,
தலையில் கல்வி ஓர் மகுடம், தரையில் நமது வாழ்வாதாரமே அதுவாகும் ,
அன்பு அடக்கம், விவேகம், வெற்றி, விடுதலை, தன்னம்பிக்கை , துணிச்சல் இவையாவும்
பெண்களிடம் தோன்றிவிடும் கல்வியால் , கற்றது கைம்மண்ணளவு கற்க வேண்டியது உலகளவு இதை அறிந்து கொண்டால் படித்துவிட்டோம் என்ற ஆணவம் கடுகளவேனும் நம்மிடத்தில் அணுகாது ,
பெண்குழந்தைகளை பொன்னாக மதிப்பிடும் காலம் வந்துவிடும்
பெண்கள் எதற்கும் கலங்க வேண்டியதில்லை , அறிவு என்ற ஆயுதம் நம்மிடம் உண்டு ,
நம்மை நாமே முட்டாளாக நினைத்து அஞ்சாது, அயராத நம் அறிவுத் திறன் கொண்டு அன்புக்குள் அடிபணிய அறிவு என்ற ஆயுதத்தை கையில் எடுப்போம்

அன்றைய பெண்கள் பரம்பரை பக்குவத்தில் வளர்ந்தார்கள், பாதுகாப்பு அதிகம் தேவைப் பட்டதில்லை
ஆனால் இன்றோ மனிதன் வாழ்க்கையில், பழக்கவழக்கங்களில், முரண்பாடுகளில், முரட்டுக் குணங்களில், வேறுபாடுகளில் தம்மை தாமே அடிமைப் படுத்திக் கொள்கிறான் .
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மேம்படுத்திக் கொள்ள நாம் கற்கும் கல்வியே நம்முடன் கூட வரும் , பேராசை, பொறாமை, தீயன யாவும் அகன்று நன்னிலைக்கு நம்மை அழைத்து செல்லும்
உயர்தர சாசனம் கல்வியே ,
கல்வியில்லையேல் நாம் ஒன்றுமில்லை வெறும் ஷீரோதான் ,
பெண்னே / உன் புகலிடம் கல்வியாகட்டும், உன் பண்பாடு கல்வியாகட்டும், உன் வாழ்வாதாரம் கல்வியாகட்டும், உன்னால் உலகம் உருவாகட்டும் ,
உன் உறுதுணை உலகுக்கு பெருந்துணையாகட்டும் ,

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Aug-18, 3:19 pm)
பார்வை : 273

சிறந்த கட்டுரைகள்

மேலே