இதேஷ்
அய்யா, இங்க வாடா.
என்னக்கா கொஞ்சங்கூட மரியாதை இல்லாம உங்க தாத்தாவை 'வாடா போடா' ன்னு கூப்படறீங்க?
ஏண்டி கண்ணகி, நீயேண்டி உம் பேர மாத்தி வச்சிட்டே.
இல்லக்கா அந்தப் பேரு தூய தமிழ்ப் பேரா இருக்குது. தமிழ்ப் பேருங்களுக்குத் தான் மரியாதை கெடையாது. அதனால எம் பேர 'ஆஷ்திகா' -ன்னு வச்சிட்டேன்.
அந்தப் பேருக்கு என்னடி அர்த்தம்?
அதெல்லாம் எனக்குத் தெரியாது. எம் மனசுல பட்ட பேர இந்திப் பேரா நெனச்சு வச்சிட்டேன்.
சரி, உம் பையன் பேரு என்ன?
அவம் பேரு 'இதேஷ்' - 'இ' ன்னா இந்தியா. 'தேஷ்' ன்னா நாடு. நானே கண்டுபிடிச்ச பேருக்கா இது. சரி, யார அய்யா இங்க வாடான்னு கூப்பிட்டீங்க.
அடியே ஆஷ்தி, உனக்கு மட்டுந்தான் வேற மொழிப் பேரை வைக்கத் தெரியுமா? எம் பையன் பேரு அய்யா. இதுவும் வேற மொழிப் பேருதான். 'என்றும் இளமை'ன்னு அர்த்தம்.
ஓ...அப்பிடியா.